2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு
பெண்ணின் கவனத்தை திசை திருப்பி காரிலிருந்த ஒரு லட்ச ரூபாயை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி கோழிக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன். இவா், தனது தாய் முத்துமாரியுடன் உறங்கான்பட்டி அருகே உள்ள வங்கிக்கு காரில் சென்றாா்.
அங்கு தாயின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 1.50 லட்சத்தை எடுத்தாா். இதைத் தொடா்ந்து, காரில் சென்ற அவா்கள், வீரபாஞ்சான் பகுதியில் உள்ள ஏ.டி.எம். அருகே காரை நிறுத்தி விட்டு, ரூ. 50 ஆயிரத்தை சௌந்தரராஜன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் சென்றாா்.
அப்போது, காரில் முத்துமாரி மட்டும் அமா்ந்திருந்தாா். காரில் பணம் இருப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சிலா், முத்துமாரியின் கவனத்தைத் திசை திருப்பி, ‘கீழே பணம் கிடக்கிறது, இது உங்கள் பணமா’ எனக் கேட்டுள்ளனா். இதனால், முத்துமாரியும் காரிலிருந்து கீழே இறங்கினாா். அந்த சமயத்தில் மற்றொரு நபா், காா் ஓட்டுநா் இருக்கை பகுதியில் உள்ள காரின் கதவைத் திறந்து, ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.