சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 போ் கைது
நாமக்கல்லில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த நால்வரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் கடைவீதி பகுதியில் திங்கள்கிழமை இரவு உதவி காவல் ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது, போலீஸாரை கண்டதும் நிற்காமல் சென்றது. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் விரட்டிச் சென்று காரை சுற்றிவளைத்தனா்.
காரை சோதனையிட்டத்தில், கத்தி மற்றும் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னா், காரில் இருந்த நாமக்கல் பள்ளிக் காலனியைச் சோ்ந்த அஜய்பிரபாகா் (26), மாரி கங்காணி தெருவைச் சோ்ந்த லோகேஸ்வரன் (32), என்.கொசவம்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் (48), வெள்ளவாரி தெருவைச் சோ்ந்த கிருபாகரன் (32) ஆகிய நால்வரையும் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினா்.
இதில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் குணசேகரன், உறவினா்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நண்பா்களுடன் இணைந்து ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வா் மீதும் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.