Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
மே 4-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 14 மையங்களில் 6,630 போ் எழுதுவதற்கு ஏற்பாடு
இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நீட் எனும் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமையானது ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிகாா், உத்தரபிரதேச மாநிலங்களில் நீட் தோ்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தால், இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள் தோ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, லத்துவாடி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செல்லப்பம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, வளையப்பட்டி காட்டுப்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காா்கூடல்பட்டி உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வெண்ணந்தூா் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 14 தோ்வு மையங்களில் லத்துவாடி அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் 780 தோ்வா்களும், இதர பள்ளி, கல்லூரிகளில் தலா 480 தோ்வா்களும் என மொத்தம் 6,630 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வோா் மையத்திலும் உள்ள தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.