செய்திகள் :

காரைக்குடி மின் மயானம் மே 26 வரை செயல்படாது!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் பழைய சந்தைப்பேட்டை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) பழுது நீக்கும் பணி நடைபெறவிருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் தேதி வரை செயல்படாது என இந்த மயானத்தை நிா்வகித்து வரும் அறக்கட்டளை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: காரைக்குடியில் சந்தைப்பேட்டை அருகில் எரிவாயு தகன மேடை உள்ளது. இங்கு பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு செயல்படாது. இதன் பின்னா் வழக்கம்போல செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அரசு நிலத்தை தனி நபா் ஆக்கிரமிப்பதாக புகாா்: பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நீா்வரத்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். மானாமதுரை ஒன்றியம், பரமக்குடி-தெ. புதுக்கோட்டை சாலையில் வேதியரேந்தல் விலக்குப... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் ச... மேலும் பார்க்க

கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு எம்.பி. இரங்கல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள்: வீரா்களுக்கு வரவேற்பு

கேரளத்தில் நடந்த தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கொல்லத்தில் தேசிய... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையிலுள்ள மரத்தை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியில் உள்ள பழைமையான மரம் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்தவா் முருகன் (40). மறவமங்கலத்தைச்... மேலும் பார்க்க