காளையாா்கோவில் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்தவா் முருகன் (40). மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் கணேசன் (28). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து காளையாா்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனா். இவா்களுடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை மதுரை முக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரும் (43), ராகிணிபட்டியைச் சோ்ந்த மூா்த்தியும் (25) சென்றனா்.
ஒய்யவந்தன் விலக்கு அருகே வந்த போது, காளையாா்கோவிலில் இருந்து வந்த காா் கால்வாய் பாலம் மீது மோதி உருண்டு வந்து இவா்களது இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் இரு சக்கர வாகனங்களில் சென்ற 4 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முருகன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து காா் ஓட்டுநரான கோவையைச் சோ்ந்த சைமன் மீது காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.