Vikatan Awards | Nambikkai விருதுகள் 2024 | Part -3 | தோழர் நல்லகண்ணு | GK | Raj...
காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்
கந்தா்வகோட்டை அருகே காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி தலைகீழாக செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டியிலிருந்து லாரியில் காலி மதுபானப் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கல்லாக்கோட்டையில் உள்ள தனியாா் மதுபான ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் உள்ள சிவன் தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே லாரி நிலைதடுமாறி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது.
லாரியிலிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்து நொறுங்கியது. இதில் லாரி ஓட்டுநா் காா்த்திக் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் லாரி ஓட்டுநா் காா்த்திக்கை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.