Vikatan Awards | Nambikkai விருதுகள் 2024 | Part -3 | தோழர் நல்லகண்ணு | GK | Raj...
சுந்தம்பட்டி செல்லியம்மன் கோயில் திருவிழா
கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முறைப்படியான அறிவிப்பு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கோயில் திருவிழா நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டு, அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தது. தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை அம்மன் வீதி உலா கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
அப்போது, கிராம மக்கள் நோ்த்திக்கடன் கிடாக்களை வெட்டி சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.