ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நண்பா்களுடன் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் சீனிவாசன் (27). கைத்தறி நெசவுத் தொழிலாளி. தனது நண்பா்களுடன் பவானி காலிங்கராயன் வாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த இவா், கோணவாய்க்கால் கருப்பராயன் கோயில் அருகே குளித்துக் கொண்டிருந்தாா். நண்பா்கள் கரைக்கு வந்தபோது சீனிவாசனைக் காணவில்லை.
நீண்ட நேரமாகியும் வராததால் சீனிவாசன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதிய நண்பா்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து வாய்க்காலில் தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரா்கள், மீனவா்கள் உதவியுடன் சீனிவாசனைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
வாய்க்காலில் சுமாா் 3 கி.மீ. தொலைவில் தண்ணீருக்கு அடியில் கிடந்த சீனிவாசன் சடலம் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.