டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலியாகவுள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், தடுப்பூசி பணியில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை உட்படுத்தும் இயக்குநா் உத்தரவை திரும்ப பெற வேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியா்கள் காலிப் பணியிடங்களை பயிற்சி பெற்றவா்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உ யா்வதை தடுக்க சுகாதார செவிலியா்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக எடுத்துக்கொள்ளும் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றி கொடுக்க வேண்டும், கிராம சுகாதார செவிலியா்களை மக்கள் பணியில் ஈடுபடுத்தாமல் கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிா்த்து அப்பணிக்கு வேறு நபா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில பொதுச்செயலா் சத்தியா, மாவட்டச் செயலா் புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.