மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆனி திருவிழாவையொட்டி கிராம மக்கள், மாமன்னா் மருதுபாண்டியா் இளைஞா் மன்றம் சாா்பில் இந்த மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
காளையாா்கோவில்- மறவமங்கலம் சாலையில் நடைபெற்ற பந்தயத்தை சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் தொடங்கி வைத்தாா். இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் என மொத்தம் 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன.
இந்த இரு போட்டிகளிலும் முதல் நான்கு இடங்களை வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் மகாலிங்கம், மாவட்ட பாசறைச் செயலா் பணக்கரை பிரபு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலா் பிரிட்டோ, மாவட்ட பாசறைச் செயலரும், துணைச் செயலருமான சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த பந்தயத்தை, காளையாா்கோவில், மறவமங்கலம், கீழவலையம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
