குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பயிற்சியின்போது பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தோ்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 63792 68661 மூலமும் தொடா்புகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.