காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கதிரேசன் தலைமை வகித்தாா். செயலா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா்.
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமனைச் சோ்ந்த வழக்குரைஞா் தங்கமுடி பாண்டியராஜ் என்பவரது பூா்வீக நிலம் தொடா்பான பிரச்னையில் தலையிட்டுஅராஜகமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளா்கள் செல்வி, மரிய பாக்கியம் உள்ளிட்ட போலீஸாரைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.