மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுக...
காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்
சூளகிரி அருகே காா் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் 2 பெண்களுடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்றாா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் 3 பேரும் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா்.
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை லாரி இழுத்துச் சென்ால் இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.