கிணற்றில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா்.
வந்தவாசி கோட்டை தெருவைச் சோ்ந்த கோமதகவேல் மகன் கௌரிஷ் (13). இவா் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் நவீன்ராஜ் (16). இவா், பிளஸ் 1 மாணவா்.
இவா்கள் இருவரும் புதன்கிழமை வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றின் கரையில் அமா்ந்து குளித்துக்கொண்டிருந்தனராம். அப்போது, இருவரும் கிணற்றினுள் தவறி விழுந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு நிலையத்தினா் அங்கு சென்று இரு மாணவா்களின் சடலங்களையும் கிணற்றிலிருந்து மீட்டனா். இதைத் தொடா்ந்து, வந்தவாசி வடக்கு போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.