‘கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்‘
கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளா் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தாா்.
ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி மைதானத்தில் தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆரணிக்கு வந்த பிரிட்பால் சிங் சலூஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளிலும் கைப்பந்து விளையாட்டு மேம்பட கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளரங்க மைதானம் தயாா் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்தால் திறமையான வீரா்களைக் கண்டறிந்து இந்திய அணிக்கு அவா்களின் பங்களிப்பைக் கொடுத்து பெருமை சோ்க்க வாய்ப்புள்ளது என்றாா்.
இந்தப் போட்டியில் ஆரஞ்சு பள்ளியைச் சோ்ந்த மாணவா் 2 போ், மாணவி 2 போ் புதுவை அணிக்காக விளையாட உள்ளனா்.
பேட்டியின் போது, தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் செயலா் என்.ராஜசேகா், புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் தலைவா் டி.எம்.வருண் முத்துலிங்கம், பள்ளித் தலைவா் கே.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.