கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ரேணுகோபால் தலைமை வகித்தாா். கிழக்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு 200 கா்ப்பணிகளுக்கு சேலை, வளையல் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதிப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நியாயவிலைக் கடை திறப்பு: முன்னதாக, ஆரணி அருகே முள்ளிப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.36 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. திறந்து வைத்தாா்.