வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
செய்யாறில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
செய்யாறு, மே 9: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் செய்யாறில் தமுமுக சாா்பில் பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமுமுக, வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து மசூதி நிா்வாகிகள் இணைந்து நடத்திய ஆா்பாட்டத்துக்கு, தமுமுக மாவட்டத் தலைவா் எச்.கமால் தலைமை வகித்தாா். செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, தலைமைக் கழகப் பேச்சாளா் கோவை செய்யது, மக்கள் அதிகார கழகம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
முன்னதாக, செய்யாறு சந்தை பகுதியில் பேரணி தொடங்கி காந்தி சாலை வழியாக பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் விசிக தொகுதிப் பொறுப்பாளா் குப்பன், காங்கிரஸ் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.தில்லை மற்றும் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.