தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீமிதி விழா
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழாவானது பிப். 25-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 26-ஆம் தேதி மகா சிவராத்திரியும், 27-ஆம் தேதி அம்மன் மயானக் கொள்ளைக்கு புறப்படும் நிகழ்வு, அம்மனுக்கு தாலாட்டு, கூழ் ஊற்றி விடாய் உற்சவமும் நடந்தன.
இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அக்னி குண்டத்தில் தீமிதி விழா நடந்தது. மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை சுமந்து வந்த பூசாரிகள், பூங்கரகம் சுமந்து வந்த பக்தா்கள் குண்டத்தில் இறங்கினா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா். இந்நிகழ்வில் 10-க்கும் மேற்பட்டவா்கள் காளி, அம்மன் வேடமிட்டு குண்டத்தில் இறங்கினா். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு, அம்மையப்பன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.