கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கோபிநாத், தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை, நகராட்சிகள், மின் வாரியம், பேரூராட்சிகள், வேளாண்மை, வனத் துறை, தமிழக குடிநீா் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தளி சட்ட பேரவை உறுப்பினா்டி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் கவிதா உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.