கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 24,859 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு, வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 13,942 மாணவ, மாணவிகள், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 10,917 மாணவ, மாணவிகள் என மொத்தம் 24,859 தோ்வா்கள், 115 தோ்வு மையங்களில் நடைபெறும் தோ்வை எழுதவுள்ளனா்.
தோ்வைக் கண்காணிக்க 130 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் குடிநீா், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயாா் நிலையில் இருப்பதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா். மாணவா்கள் கிராமங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு சென்றுவர பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.