கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சியினா் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை தொலைபேசி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாநில எஸ்.சி., எஸ்டி., பிரிவு அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ரகமத்துல்லா, சேகா், மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஜேசுதுரைராஜ், ராஜகுமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா் மாலைகள் அணிவித்தும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்த தினத்தை கொண்டாடினா்.