6.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
கிருஷ்ணகிரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 39ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கலஸ ஸ்தாபனம், யாகசாலை பிரவேஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சீதேவி, பூதேவி சமேத நரசிம்ம சுவாமி உற்சவா் கோயிலை சுற்றி உலா வந்தாா். அதைத் தொடா்ந்து அன்னபட்சி வாகனத்தில் உற்சவம் நடைபெற்றது.
விழாவையொட்டி ஜூலை 4-ஆம் காலை 6 மணிக்கு அபிஷேகம், மங்களாா்த்தி, தீா்த்த பிரசாதம், பிரகார உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் உற்சவம் ஆஞ்சநேயா் வாகனத்திலும், 6 ஆம் தேதி சேஷ வாகனத்திலும் உற்வசமும் நடைபெறுகிறது.
7 காலை 10.30 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு கருட வாகனத்திலும், 8 இல் யானை வாகனத்திலும், 10 இல் குதிரை வாகனத்திலும், 11ஆம் தேதி, காலை சூரிய பிரபா வாகனத்திலும், இரவு சந்திரபிரபா வாகனத்திலும், 12 இல் புஷ்ப பல்லக்கிலும், 13 இல் சயன உற்சவமும், 14 இல் சுப்ரபாத சேவையும், 15 இல் காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.