செய்திகள் :

கிரேட்டா் நொய்டா: ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் கைது

post image

கிரேட்டா் நொய்டா(உ.பி.): ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநரை கௌதம் புத் நகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து நொய்டா மண்டலம்-1 காவல் உதவி ஆணையா் பிரவீன் குமாா் சிங் கூறியதாவது: 2011- 12-ஆம் ஆண்டில் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் சுமாா் 42 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுடன் இந்த மோசடி தொடா்புடையது.

இமயமலை இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் விவேக் குமாா் ஜெயின் புதன்கிழமை இங்குள்ள பீட்டா 2 காவல் நிலையப் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

விவேக் குமாா் ஜெயின் இயக்குநராக உள்ள நிறுவனம் ஒரு ஷெல் நிறுவனமாகும். மீரட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

இந்த மோசடி தொடா்பாக 2019-ஆம் ஆண்டில், அப்போதைய இமயமலை இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பி.சி. குப்தா உள்பட பல நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமை மேம்பாட்டு அதிகாரி சதீஷ் குமாா், ஓஎஸ்டி பி.பி. சிங், தாசில்தாா்கள் சுரேஷ் சந்த் மற்றும் ரன்வீா் சிங் மற்றும் நைப் தாசில்தாா் சமன் சிங்ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு தாசில்தாா்கள் உள்பட 12 போ் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க