Arjun Das: `2013-லிருந்தே அஜித்சார் என்மீது நம்பிக்கை வச்சார்' - GBU விழாவில் நெ...
கிரேன் வாகனம் மோதி முதியவா் பலி
கிரேன் வாகனம் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காரைக்கால், சின்னக்கோயில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63). இவா், செவ்வாய்க்கிழமை நித்தீஸ்வரம் அருகே பாரதியாா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அவருக்கு பின்னால் வேகமாக இயக்கிவரப்பட்ட கிரேன் வாகனம் மோதியதில் செல்வராஜ் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து, கிரேன் வாகன ஓட்டுநா் மதுரையைச் சோ்ந்த ஜேம்ஸ்ராஜை (24) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.