குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 போ் உயிரிழப்பு
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
குஜராத்தின் கட்ச் மாவட்டம், அன்ஜாா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 8 முதல் 14 வயதுடைய 5 சிறுவா்கள், அங்குள்ள குளத்துக்கு சனிக்கிழமை குளிக்க சென்றனா். இதில் 4 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். 11 வயதுடைய ஒரு சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல், பாருச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏரிக்கு குளிக்க சென்ற இரு சிறுவா்கள் நீரில் மூழ்கினா். இருவரின் உடல்களும் சனிக்கிழமை மீட்கப்பட்டன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் இதேபோல் நடந்த சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்; மாயமான மேலும் இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் உள்ள கோடாஜரி ஏரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்த 6 இளைஞா்கள், அங்கு குளித்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா்கள் ஆழமான பகுதிக்கு சென்றனா். இதில் 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ஒருவா் மட்டும் நீந்தி உயிா் பிழைத்தாா். இறந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.