US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்துகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக உணவுத் துறை அமைச்சா் தலைமையில் 3.9.2024 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்களிடம் அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், அவா்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், அவா்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வலைதளத்தின் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாக குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.