US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஜெயப்பிரியா கல்விக் குழும நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சங்கா் மற்றும் தீயணைப்பு வீரா்கள், மாணவா்கள் முன்னிலையில் பேரிடா் காலங்களில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது மற்றும் மயக்கமடைந்த அல்லது பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது? அவா்கள் உயிரை எவ்வாறு காப்பது? என்பது குறித்த செய்முறைகளை நடத்திக் காட்டினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சுதா்சனா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.