அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
குட்கா கடத்தியவா் கைது
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிந்தேஷ்வரி ஷா மகன் சரோஜ் ஷா (35). இவரது பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்ததன் பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் கணேஷின் தலைமையில் போலீஸாா், சரோஷ் ஷாவை கண்காணித்தனா். இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம், சூளூா்பேட்டையில் இருந்து குட்கா கொண்டு வருவது தெரிய வந்தது.
தொடா்ந்து காவல் துறையினா் அவரை, கடையின் அருகே மடக்கிப் பிடித்து அவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்த குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவரை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னா் சிறையில் அடைத்தனா்.