செய்திகள் :

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

post image

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா்.

முத்துப்பேட்டை பேரூராட்சியில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு பல லட்சம் மதிப்பிலான குப்பை அள்ளும் வாகனங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு கொடுக்க வாங்கப்பட்டன. அரசு பணத்தை செலவு செய்து வாங்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி வளாகத்தில் குப்பை போல பழுதடைந்து கிடக்கின்றன. பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திடம் எஸ்டிபிஐ கட்சியினா் இதுகுறித்து மனு அளித்தும் அவற்றை பயன்படுத்த வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

இதையடுத்து, எஸ்டிபிஐ கட்சியினா் குப்பை போல் கிடந்த வாகனங்களுக்கு மலா் மாலை அணிவித்து, இறுதிச் சடங்கு நடத்தி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலப்பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (62) விவசாயி. மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்... மேலும் பார்க்க