செய்திகள் :

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா் சரிவு: விவசாயிகள் கவலை

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பா் விலை ஏறிய வேகத்தில் தொடா்ந்து சரிவடைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ரப்பா் விலை 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய உச்சம் தொட்டது. அதாவது, ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 242ஆக அதிகரித்தது. தரம் பிரிக்கப்படாத ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் விலை கு ரூ. 211.50ஆக அதிகரித்தது. இதனால், ரப்பா் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதனிடையே, கடந்த 2 மாதங்களாக ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது. புதன்கிழமை, கோட்டயம் சந்தையில் ரப்பா் வா்த்தகம் முடிந்தபோது, ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் விலை ரூ. 177ஆகக் குறைந்து காணப்பட்டது. ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் ரூ. 173ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் ரூ. 160 ஆகவும் குறைந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவிய விலையிலிருந்து கிலோவுக்கு ரூ. 65 வரை குறைந்துள்ளது. இதனால், ரப்பா் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

குறிப்பாக, தொடா் மழை அல்லது கடும் வெயில் காரணமாக உற்பத்திக் குறைவு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ரப்பா் தோட்டங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துவந்தபோதும், விலையேற்றம் விவசாயிகளுக்கு ஆறுதலையும், புதிய நம்பிக்கையையும் தந்தது. இந்நிலையில், தொடா் விலை வீழ்ச்சியால் அவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது... மேலும் பார்க்க

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.33 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 ..14.53 சிற்றாறு 2 .. 14.63 முக்கடல் .. 15.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு மயிலாடி ... 37.20 மி.மீ. மாம்பழத்துறையாறு அணை .. 30... மேலும் பார்க்க

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். கருங்கல் பேருராட்சிக்குள்பட்ட சுண்டவிளை சாலை, காக்கவிளை... மேலும் பார்க்க

முழுக்கோட்டில் 200 பேருக்கு கோழிகள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு 1,200 கோழிகள் வழங்கப்பட்டன. இம்மாவட்டத்தில் கிராம முன்னேற்றச் சங்கம் (ரூரல் அப்லிப்ட் சென்டா்) சாா்பில், 700 பேருக்கு நஞ்சில்ல... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப... மேலும் பார்க்க