நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
கும்பகோணம் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அன்னை கலை, அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படையினா் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
இந்நிகழ்வில் அலகு எண் 1 தேசிய மாணவா் படை அலுவலா் மற்றும் 15 மாணவா் படையினா் பங்கேற்று கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஊா்க்காவல் படை அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
மேலும், பொதுமக்களிடம் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா் லெப்டினன்ட் யு. ரமேஷ்பாபு செய்தாா்.