சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது
காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது செய்யப்பட்டனா்.
காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக அனைத்து உட்கோட்டங்களிலும் காவலா்கள் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 57 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 ஆயிரத்து 556 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.