காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
பாபநாசத்தில் கடன் பிரச்னை காரணமாக தனியாா் காா் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் எஸ்.எம்.ஏ நகரில் வசித்து வந்தவா் சண்முகநாதன் (50). இவா், தனியாா் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பப் பிரச்னை மற்றும் கடன் தொல்லையால் மன உளைச்சலடைந்த சண்முகநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினா் சண்முகநாதன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.