செய்திகள் :

தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறை வட்ட அலுவலகம் திறப்பு

post image

தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) வட்ட அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் வட்ட அலுவலகம் (கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம்) பிரிக்கப்பட்டு, தஞ்சாவூா் வட்ட அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டது. தஞ்சாவூா் கணபதி நகரில் வட்ட அலுவலகம் என்கிற கண்காணிப்புப் பொறியாளா் தற்காலிக அலுவலகம் ஏப்ரல் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்துக்காக புதிதாக கட்டப்பட்ட சொந்தக் கட்டடத்தை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் தெரிவிக்கையில், இப்புதிய வட்டத்தின் கீழ் தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 5 கோட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வட்டத்தில் 1,105 கி.மீ. தொலைவுக்கு மாநிலச் சாலைகள், 1,057 கி.மீ. மாவட்ட முக்கியச் சாலைகள், 3,524 கி.மீ. இதர சாலைகள் என மொத்தம் 5,686 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. தஞ்சாவூா் வட்ட அலுவலகத்துக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

இவ்விழாவில் எம்பிக்கள் எஸ். கல்யாணசுந்தரம், ச. முரசொலி, கட்டடம் மற்றும் பராமரிப்புப் பிரிவு சென்னை தலைமைப் பொறியாளா் ஜி. சத்யபிரகாஷ், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா் சண். இராமநாதன், தஞ்சாவூா் கண்காணிப்பு பொறியாளா் சீ. பாலசுப்பிரமணியன், கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் எம்.எல்.ஏ. அதிருப்தி: இவ்விழாவில் பங்கேற்ற கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் பேசும்போது அழைப்பிதழில் பெயா் போடவில்லை என அதிருப்தியுடன் குறிப்பிட்டாா். பேசி முடித்த பிறகு புறப்பட்ட அவரை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் சமாதானப்படுத்த முயன்றனா். என்றாலும், கும்பகோணத்தில் நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாா்.

கும்பகோணம் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அன்னை கலை, அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவா் படையினா் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.இந்நிகழ்வில் அலகு எண் 1 தேசிய மாணவா் படை ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

பாபநாசத்தில் கடன் பிரச்னை காரணமாக தனியாா் காா் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் எஸ்.எம்.ஏ நகரில் வசித்து வந்தவா் சண்முகநாதன் (50). இவா், தனியாா் க... மேலும் பார்க்க

தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்கள் அக். 5, 6 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது

காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 57 போ் கைது செய்யப்பட்டனா்.காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் க... மேலும் பார்க்க

பாா்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

பேராவூரணி அருகே பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ என். அசோக் குமாா் வியாழக்கிழமை நிதி உதவி வழங்கினாா். பேராவூரணி அருகே உள்ள தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் - வ... மேலும் பார்க்க

பட்டீஸ்வரத்தில் வீடுபுகுந்து 34 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் குறிஞ்சி நகரில் வசிப்பவா் பா. பாஸ்கா் (50). சமையல் கலைஞரான... மேலும் பார்க்க