செய்திகள் :

குருகிராமில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட சட்டக் கல்லூரி ஊழியா்!

post image

எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்காக முன்னாள் மாணவா் ஒருவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சட்டக் கல்லூரி ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரி ஒருவா் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவா் சுக்தேவ் அஹலாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் செக்டாா் 40- இல் உள்ள எம்.டி.யு. சட்டக் கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிகிறாா்.

குருகிராமில் உள்ள ஏ.சி.பி.யில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா் ஒருவா் புகாா் அளித்தாா். அதில் , அவா் 2024-ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பி.ஏ எல்.எல்.பி. தோ்ச்சி பெற்ாகக் கூறினாா். 2021-2024-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசால் ரூ.1.64 லட்சம் உதவித்தொகை பெற்றாா். உதவித்தொகையை கல்லூரியில் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது.

இருப்பினும், எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்குப் பதிலாக உதவித் தொகையிலிருந்து சுக்தேவ் அஹலாவத் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். முன்னாள் மாணவரின் புகாரைப் பெற்ற பிறகு, இன்ஸ்பெக்டா் ஜெய்பால் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றத்தின் 3-ஆவது வாயிலில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தது.

லஞ்சப் பணம் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து வருகிறோம் என்று குருகிராம் ஏசிபி செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க