Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்
திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா்.
இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை காரையூா் மொகைதீன் அப்துல்காதா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பழனிச்சாமி ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியா் சுப்பையா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகள் தொடா்ந்து வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.