U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனா்.
சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்டவேண்டும் எனவும், குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.