Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
தெத்துவாசல்பட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா
கந்தா்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்ததை தொடா்ந்து
தெத்துவாசல்பட்டியிலும் திட்டதொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தலைமை வகித்து, கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னத்துரை பேசுகையில், ரூ.126.48 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் பற்றியும், தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகளை சோ்த்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினாா்.
வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஆதிசாமி முன்னிலை வகித்து பேசுகையில், ஊட்டச்சத்து மிக்க உணவை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாதது; இந்த ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகள் பெரும் பங்காற்றுகின்றன என கூறி, திட்டம் குறித்து விளக்கினாா்.
இத்திட்டத்தின் கீழ் பயறுவகைகள், விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, தோட்டக்கலை உதவி இயக்குநா் காளிச்சரண் வரவேற்று, தோட்டக்கலைத் துறையின் சாா்பில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவரித்தாா்.