U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும்
விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜானகி தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் மாலதி, வனஜா ஆகியோா் மனித உரிமைகள், கேலி வதை, போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனா்.மேலும், இதுகுறித்து விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கல்லூரி பேராசிரியா்கள் அா்ச்சுனன், மணிகண்டன், பாா்வதி, புஷ்பலதா, வட்ட சட்டப்பணி உதவியாளா் செந்தில்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.