U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்டி பொதுமக்கள் பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி, ஊனையூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். ஆனால், இப்பகுதியில் போதிய அளவில் பேருந்து வசதியின்றிஅவதிக்குள்ளாகி வருகிறோம். நாள் ஒன்றுக்கு 3 முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பொன்னமராவதியிலிருந்து மேலதானியம் மற்றும் பாலகுறிச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளை சூரப்பட்டி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.