செய்திகள் :

குறைகள் தீர்க்கும் ஜேஷ்டாதேவி!

post image

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர பேரரசர்கள் போன்றோர் அர்ப்பணிப்போடு உருவாக்கிய எண்ணற்ற கோயில்கள் அந்நியர்கள் படையெடுப்பின்போதும், பராமரிப்பின்மையாலும் சிதிலமடைந்துள்ளன. அந்த வகையில் முதலாம் ராஜராஜன் காலத்தைய வீரபுரம் சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, பேரூர் ஆதீனம் சோணாசலஅடிகளின் பெருமுயற்சியால் ஊர் மக்களின் ஆதரவோடு புதுப்பொலிவைப் பெற்றுள்ளது.

1932 - 33இல் தொல்லியல் ஆய்வு அறிக்கையின்படி, கோயிலில் நான்கு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வீராபுரம் எனப்படும் இந்தத் தலம் முதலாம் ராஜராஜனால் 988 }இல், அதாவது ஐந்தாம் ஆட்சி ஆண்டில் செய்யூர் கோட்டத்தில் நெடுங்குன்ற நாட்டில் உள்ள ஊராக விளங்கியது. முதலாம் ராஜராஜனின் அணுக்க பீமர் படைத்தளபதியான விடங்கன் என்பவர் இறைவனுக்கு உச்சிக் கால அமுது அளிக்க அறக்கட்டளை நிறுவிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இளங்கண்ணகன் ஏரன் அருநிலை நம்பியும், உழைச்சானன் நீலகண்டன் என்பவரும், மண்டபத் தூண்களையும், புலியூர் ஊர் தலைவர் தேவன் வயிரமேகன் என்பவர் விளக்குகளை எரிக்க நிலங்களையும் அளித்துள்ளனர்.

இறைவன் உச்சீஸ்வரர். "உஞ்சீஸ்வரத்தாழ்வார்' என்று முன்னர் அழைக்கப்பட்டாலும், இறைவனின் இன்றைய பெயர் வீரமங்களநாதன். இறைவி வீரமங்களநாயகி தெற்கு முகமாய் காட்சி அருளுகிறார். இறைவன் சதுர வடிவ ஆவுடையாராக சுயம்புலிங்க மூர்த்தியாக கிழக்கு முகமாய் அருள்புரிகிறார்.

சோமாஸ்கந்த மூர்த்தி கலை நயத்தோடு காலங்களைக் கடந்து காட்சி தருகிறது. சிவன், பார்வதி அருகருகே அமர்ந்திருக்க, அன்னையின் மடியில் ஒய்யாரமாக முருகன் குழந்தையாக காட்சி தருகிறார். கீழே முயலகன், பூதகணங்கள் பீடத்தை, இரு சிம்மத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. விஷ்ணு, பிரம்மா மகிழ்வோடு காட்சி அளிக்கின்றனர். இறைவன் சந்நிதி எதிரில் நந்தி தேவரும், அருகே தெற்கு நோக்கிய வீராபுரம் மங்கலநாயகியும் காட்சி அளிக்கின்றனர்.

கல்யாண தீர்த்தம் குளக்கரையில் "ஜேஷ்டாதேவி' எனும் சோழர்கால மூத்த தேவி சிலை அமைந்துள்ளது. ஜேஷ்டாதேவிக்கு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 6 மணி வரையிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்போரின் குறைகள் விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

புனிதத் தீர்த்தமாக விளங்கும் கல்யாண தீர்த்தக் குளத்தில் குளித்து எழுந்து இறைவனை வழிபடுபவருக்கு திருமண வரம் கிடைப்பதாக ஐதீகம்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கழுக்குன்றம்} அமிஞ்சிக்கரை வழித்தடத்தில் வீராபுரம் அமைந்துள்ளது.

தடைகள் போக்கும் திங்களூர்

பாற்கடலைக் கடையும்போது தேவர்களுக்கு கிடைத்த கொடிய நஞ்சின் தீவிரம் வெப்பமாக மாறி, தேவர்களையும், அசுரர்களையும் சுட்டு பொசுக்கத் தொடங்கியது. தேவர்களுக்கு அபயம் அளிக்க, சிவன் தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம்... மேலும் பார்க்க

மலை மேல் அருள்புரியும்..

"கரன், திரிசிரன், தூசனன் என்ற மூன்று அசுர சகோதரர்களில், இறைவனை கரன் வழிபட்டு வருகிறான். ஒருநாள் இந்திரன் முதலான தேவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அசுரன் அங்கு வரவே, தேவர்கள் எறு... மேலும் பார்க்க

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)முயற்சிகள் முன்... மேலும் பார்க்க