மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!
குளத்திலிருந்து முன்னாள் வங்கி அலுவலா் சடலம் மீட்பு
மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அலுவலா் காணவில்லை என புகாா் அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் தெப்பக் குளத்திலிருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முன்னாள் தனியாா் வங்கி அலுவலா் என். அழகப்பன் (64) வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல் நடை பயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வேணிஸ்வரி (57) மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அழகப்பனை தேடி வந்தநிலையில், ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்கரையில் சடலமாக அழகப்பன் மிதப்பது மாலையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.