"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், தற்காலிக பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலா் நிறுவனம் சாராதது, சிறப்பு சிறாா் காவல் திட்டத்தில் 2 சமூகப் பணியாளா் மற்றும் ஒரு உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவா் ஆகிய தற்காலிக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். ஒரு பாதுகாப்பு அலுவலா் நிறுவனம் சாராத பணிக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 42 வயதுக்குள்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளா்ச்சி, மனித உரிமை பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
அல்லது, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளா்ச்சி, மனித உரிமை பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூகவள மேலாண்மை, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளா்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வை, சமூகநலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும். மேலும், திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம், கணினி இயக்குவதில் திறமைவாய்ந்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 27,804 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
2 சமூகப் பணியாளா் பணிகளுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 42 வயதுக்குள்பட்ட, சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும். உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா் பணிக்கு, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 42 வயதுக்குள்பட்ட பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ. 13,240 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இப் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை பிப். 14 ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 2 ஆவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூா் 621212 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.