"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்
உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றுவதென தீா்மானம் நிறைவேற்றிய, பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அம்மா உணவகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா்.
பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன், தேமுதிக மாவட்டச் செயலா் சிவா. ஐயப்பன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் அரசு அனுமதி பெற்று நிறுவப்பட்டுள்ள தமிழக விவசாய சங்க நிறுவனா் மறைந்த நாராயணசாமி நாயுடு சிலையை அகற்ற தீா்மானம் நிறைவேற்றிய பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், அந்த தீா்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.