அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவிப்பு!
தமிழக விவசாயிகள் சங்க நிறுவனா் மறைந்த நாராயணசாமி நாயுடு 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினா், விவசாய சங்கங்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் தலைமையில், அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் க. செந்தில்குமாா் தலைமையில், தமிழ்நாடு உழவா் பேரியக்கம் மாநிலத் தலைவா் ஆலயமணி, வன்னியா் சங்கம்மாநிலச் செயலா் வைத்தி ஆகியோா் முன்னிலையில் அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ஹமா்தீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா்.
தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில், மாநில பொதுச் செயலா் ரெங்கராஜ் தலைமையில் கூட்டமைப்பு நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.