குழித்துறை நகராட்சியில் சொத்துவரியை மாா்ச் 3-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையர்
குழித்துறை நகராட்சிப் பகுதியில் வசிப்போா் சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி உள்ளிட்டவற்றை மாா்ச் 3ஆம் தேதிக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என, நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தவறும்பட்சத்தில், வீடு, தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க மின் வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.