செய்திகள் :

கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை அறிமுகம் செய்த சீனா!

post image

கூகுளின் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது.

சீனா அறிமுகம் செய்துள்ள ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.

சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்டிசி) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி ’ஜுச்சோங்ஷி - 3’ என்ற குவாண்டம் கணினியைக் கண்டுபிடுத்துள்ளனர்.

வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் ’ஜுச்சோங்ஷி - 3’, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணினியைவிட 10 ஆயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகமாக இயங்குகிறது.

இதையும் படிக்க : அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 நாள் ஆட்சி! அதிரடியா? அடாவடியா?

குவாண்டம் கணினி கடந்துவந்த பாதை...

2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் 53 க்யூபிட் சைகாமோர் ப்ராஸசரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குவாண்டம் கணினியானது, அந்த சமயத்தில் உலகில் அதிவேகமாக இயங்கிய சூப்பர் கணினி 10,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை வெறும் 200 வினாடிகளில் செய்தது.

2023 ஆம் ஆண்டு சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் 1,400 ஏ100 ஜிபியூ ப்ராஸசரை பயன்படுத்தி, கூகுளின் குவாண்டம் கணினி 200 வினாடிகளில் செய்த பணிகளை வெறும் 14 வினாடிகளில் செய்து முடித்தது. மேலும், விரிவாக்கப்பட்ட மெமரியுடன் கூடிய ஃபிராண்டியர் சூப்பர் கணினிகள் இதே பணியை 1.6 வினாடிகளில் செய்தது.

இதனிடையே, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் ஜுச்சோங்ஷி 1 மற்றும் 2 ஆகிய குவாண்டம் கணினிகளை கண்டுபிடித்தனர்.

கடந்தாண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.

ரயில் சிறைபிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!

ரயில் சிறைபிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரயிலில் இருந்த 104 பயணிகள் பத்திரமாக பாதுகாப்பு பணியாளர்களால் மீட்கப்பட்டனர். பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட... மேலும் பார்க்க

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்; 80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலை கடத்தி, 182 பேரைப் பிணைக் கைதிகளாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) தீவிரவாதக் குழு சிறைபிடித்தது. இவா்களில் 80 பேரை மீட்டதாக பாதுகாப்புப் பட... மேலும் பார்க்க