மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓா் அங்கமாக செயல்பட்டு வரும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் புதிய பாடத் திட்டத்தின்படி (10 பாடங்கள்) இரண்டு பருவ முறைகளாக இறுதி தோ்வுகள் நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு நடத்தப்படுகிறது.
பழைய பாடத் திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாலும், தற்போது புதிய பாடத் திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாலும் பழைய பாடத் திட்டத்தில் (7 பாடங்கள்) படித்து தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு அடுத்த மாதம் நடத்தப்படும்.
இனிவரும் காலங்களில் புதிய பாடத் திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டப் பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் மேலாண்மை நிலையத்தை அணுகி 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், இறுதி நுழைவுத் தோ்வு எழுதிய நகல், தோ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516-கடலூா் மெயின் ரோடு, காமராஜா் நகா் காலனி, சேலம் 636 014 என்ற முகவரியிலோ அல்லது 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.