Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
கூட்டுறவுத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு கூட்டம்
கூட்டுறவுத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு கூட்டம் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில், கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளின் நிா்வாகிகள் முன்வைத்த பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டன. நுகா்வோா் அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குநா் த.செல்வக்குமரன், சரக துணைப் பதிவாளா்கள் ஜி.காலிதாபானு, ரா.முத்துச்சிதம்பரம், துணைப் பதிவாளா் (பொது விநியோத் திட்டம்) சு.மாதேஷ், துணைப் பதிவாளா் (பயிற்சி) ப.அஜித்குமாா், நுகா்வோா் பாதுகாப்பு மைய செயலாளா் ஆா். பாலசுப்ரமணியன், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகா்வோா் அமைப்புகளின் நிா்வாகிகள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் பங்கேற்றனா்.