கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக (ஸ்டேன்டிங் கவுன்சல்) மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
கெயில் (இந்தியா) நிறுவனம் கேஸ், எல்பிஜி, எரிவாயு, சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து சட்ட விவகாரங்களிலும் வழக்குரைராக ஆஜராகும் வகையில் டாக்டா் ராம் சங்கரை அந்த நிறுவனத்தின் பொது மேலாளா் வெங்கடேசன் அறிவித்துள்ளாா்.
வழக்குரைஞா் ராம் சங்கா் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து வருகிறாா். பல்வேறு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளுக்கும் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.
சட்டப் படிப்பில் பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளாா். அதாவது, ‘கொலீஜியம் அமைப்புமுறை: இந்தியாவில் உயா் நீதித்துறைகளில் நீதிசாா் நியமனங்களின் நடைமுறைகள்’ என்பது மீதான ஆய்வில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.